ஏப்ரல், 2021 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஏப்ரல் 2021

பால் முதலில் வருகிறது

ஏழாம் நூற்றாண்டில், இப்போது ஐக்கிய இராஜ்ஜியம் என்று அழைக்கப்படும் நாடு பல ராஜ்யங்களாக பிரிந்து அடிக்கடி போர் புரிந்து கொண்டிருந்தது. நார்த்தம்ப்ரியாவின் ஓஸ்வால்ட் ராஜா இயேசுவின் விசுவாசியாக மாறினபோது, அவர் தனது பகுதியில் சுவிசேஷம் அறுவிக்க ஒரு மிஷினெரியை அழைத்தார். கோர்மன் என்னும் பெயருடைய மனிதர் அனுப்பப்பட்டார், ஆனால் சரியான பலன் கிடைக்கவில்லை. ஆங்கிலேயர்கள் “பிடிவாதமாக,” “காட்டுமிராண்டித்தனமாக,” இருப்பதை மற்றும் அவரது பிரசங்கத்தில் அக்கறை இல்லாததையும் கண்டு, அவர் விரக்தியுடன் வீடு திரும்பினார்.

ஐடான் என்ற ஒரு துறவி கோர்மனிடம், “கற்றுக் கொள்ளாதவர்களிடம் நீங்கள் இருந்ததை விட நீங்கள் மிகவும் கடுமையாக இருந்தீர்கள்” என்று கூறினார். நார்த்ம்பிரியர்களுக்கு " பாலை போல் மிகவும் எளிதான கோட்பாட்டை" கொடுப்பதற்கு பதிலாக, புரிந்துகொள்ள முடியாதவற்றை கோர்மன் பிரசங்கித்திருந்தார்.  ஐடன் நார்தம்பிரியாவுக்குச் சென்று , தனது பிரசங்கத்தை மக்களின் புரிதலுக்கு ஏற்றவாறு மாற்றினார் , ஆயிரக்கணக்கானோர் இயேசுவை விசுவாசித்தார்கள்.

ஐடனுக்கு இந்த முக்கியமான அணுகுமுறை வேதத்திலிருந்து கிடைத்தது. பவுல் கொரிந்தியரிடம், “நீங்கள் பெலனில்லாதவர்களானதால் உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்” (1 கொரிந்தியர் 3:2). சரியான வாழ்க்கை மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதற்கு முன்பு, இயேசுவைப் பற்றிய அடிப்படை போதனை, மனந்திரும்புதல் மற்றும் ஞானஸ்நானம் ஆகியவற்றைப் மக்கள் புரிந்திருக்க வேண்டும் (எபிரெயர் 5: 13–6: 2). முதிர்ச்சி பின்பற்றப்பட வேண்டும் (5:14), வரிசையை தவறவிடக்கூடாது. இறைச்சிக்கு முன் பால் வருகிறது. மக்களால் புரிந்து கொள்ளாத போதனைகளுக்குக் கீழ்ப்படிய இயலாது. 

நார்த்ம்பிரியர்களின் நம்பிக்கை இறுதியில் தங்கள் நாட்டிற்கு அப்பால் பல நாடுகளுக்கு  பரவியது. ஐடனைப் போலவே, மற்றவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, ​​அவர்கள் இருக்கும் நிலையிலேயே நாம் அவர்களை சந்திக்கிறோம்.

ஒன்றாக வேலை செய்தல்

ஜோ ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்தார், பெரும்பாலும் இடைவெளி எடுக்காமல். ஒரு தொண்டு நிறுவனம் தொடங்குவதற்கு பெரும்பாலான நேரம் மற்றும் ஆற்றல் தேவைப்பட்டது. அவர் வீட்டிற்கு வந்த போது தனது மனைவிக்கும் குழந்தைகளுக்கும்  செலவிட குறைவான நேரமே இருந்தது. நாள்பட்ட மன அழுத்தததிற்கு பின்னர் ஜோவை மருத்துவமனையில் சேர்ர்க்க நேர்ந்தது, ஒரு நண்பர் அவருக்கு உதவ ஒரு குழுவை ஏற்பாடு செய்ய முன்வந்தார். தனது தொண்டு நிறுவனத்தின் மீதான கட்டுப்பாட்டைக் கைவிடுவதற்கு அவர் பயந்தாலும், ஜோ தனது தற்போதைய வேகத்தைத் தொடர முடியாது என்று அறிந்திருந்தார். அவர் தனது நண்பரையும் ... தேவனையும் நம்புவதற்கு ஒப்புக்கொண்டார், ஏனெனில் அவர்கள் ஒன்றாகத் தேர்ந்தெடுத்த நபர்களின் குழுவிற்கு பொறுப்புகளை அவர் ஒப்படைத்தார்.  தேவன் அனுப்பிய உதவியை அவர் மறுத்திருந்தால், தொண்டு நிறுவனமும் அவரது குடும்பத்தினரும் ஒருபோதும் இது போன்றதோரு முன்னேற்றம் அடைந்திருக்காது என்பதை ஒரு வருடத்திற்கு பின்னர் ஜோ ஒப்புக்கொண்டார்.

அன்பான சமூகத்தின் ஆதரவு இல்லாமல் வளர்ச்சி அடையும்படி தேவன் மக்களை  வடிவமைக்கவில்லை. யாத்திராகமம் 18-ல் மோசே இஸ்ரவேல் மக்களை வனாந்தரத்தில் வழிநடத்தினார். அவர் ஒரு ஆசிரியராக, ஆலோசகராக, ஒரு நீதிபதியாக தேவனுடைய மக்களுக்கு சேவை செய்ய முயன்றார். அவரது மாமனார் வந்து சந்தித்தபோது ​​அவர் மோசேக்கு ஆலோசனைவழங்கினார்:  “நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்து போவீர்கள். இது உமக்கு மிகவும் பாரமான காரியம். நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலேகூடாது” என்று எத்திரோ கூறினார்.(யாத்திராகமம் 18:18). விசுவாசமுள்ளவர்களுடன் பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்ள மோசேயை அவர் ஊக்குவித்தார். மோசே உதவியை ஏற்றுக்கொண்டார், முழு சமூகமும் பயனடைந்தது.

நாம் ஒன்றிணைந்து செயல்படும்போது, ​​தேவன் தம்முடைய எல்லா  மக்களிடமும் அவர்கள் மூலமாகவும் செயல்படுகிறார் என்று நாம் நம்பும்போது , உண்மையான இளைபாறுதலை காணலாம்.

அணைத்துக் கொள்ளுதல்

“அப்பா, நீங்கள் எனக்காக படித்து காட்டுவீர்களா?” என் மகள் கேட்டாள். அது ஒரு குழந்தை பெற்றோரிடம் கேட்கும் வழக்கமில்லாத கேள்வி அல்ல. ஆனால் என் மகளுக்கு இப்போது பதினொரு வயது. இந்த சமயத்தில் அத்தகைய கோரிக்கைகள் அவள் இளமையாக இருந்தபோது இருந்ததை விட குறைவாகவே உள்ளன. "ஆம்,"என்று நான் மகிழ்ச்சியுடன் சொன்னேன், அவள் படுக்கையில் என் அருகில் சுருண்டு படுத்துக்கொண்டாள்.

நான் அவளுக்காக படித்து காட்டியபோது அவள் உண்மையாகவே என்னுள் உருகினாள்.  நம்முடைய பிதா நம்மீது வைத்திருக்கும் நேர்த்தியான அன்பு, ​​அவருடைய பிரசன்னத்திற்குள்ளும் நம்மீதுள்ள அன்பிற்குள்ளும் நம்மை “அணைக்க வேண்டும்” என்ற அவருடைய ஆழ்ந்த விருப்பம் ஆகியவற்றின் அறிகுறியை நாம் உணரும்போது ஒரு தந்தையாக பல சிறப்பான தருணங்களில் இதுவும் ஒன்று,

நான் என் பதினொரு வயது உள்ள எனது மகளை போல் அந்த தருணத்தில் உணர்ந்தேன். பெரும்பாலான நேரம், நான் யாரையும் சாராமல் இருப்பதில் கவனம் செலுத்துகிறேன். தேவன் நம்மீது வைத்திருக்கும் மென்மையான மற்றும் பாதுகாப்பான அன்பிலிருக்கும் தொடர்பை இழப்பது மிகவும் எளிது, சங்கீதம் 116 “கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர். நம்முடைய தேவன் மனஉருக்கமானவர்” என்று விவரிக்கிறது (வச. 5). இந்த அன்பில், என் மகளைப் போலவே, தேவனின் மடியில், அவரது வீட்டில் எனக்கு மகிழ்ச்சி இருக்கும்.

சங்கீதம் 116: 7, தேவனின் நல்ல அன்பை நாம் தவறாமல் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும், பின்னர்  காத்திருக்கும் அவருடைய கரங்களில் தவழ்ந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறது: "என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மைசெய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு". அது  உண்மையாகவே, அவரிடம் உள்ளது. 

முட்டாள்தனத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல்

ஒரு நபர் மளிகை கடைக்குள் நடந்து சென்று கவுண்டரில் ரூ.500-யை வைத்து கொண்டு சில்லரை  கேட்டார். கடைகாரர் பணப் பெட்டியை திறந்த போது, அந்த மனிதன் ஒரு துப்பாக்கியை எடுத்து அனைத்து பணத்தையும் கேட்டார்  அந்த கடைக்காரர் உடனடியாக முழுவதையும் வழங்கினார். அந்த நபர் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார், ஐதூறு ரூபாய் நோட்டை கவுண்டரிலேயே  விட்டுவிட்டார் . அந்த பணப் பெட்டியிலிருந்து அவர் பெற்ற மொத்த பணம்?முன்னூறு ரூபாய்.

நாம் அனைவரும் சில நேரங்களில் முட்டாள்தனமாக செயல்படுகிறோம் ... இந்த திருடனைப் போலல்லாமல், நாம் சரியானதைச் செய்ய முயற்சிக்கிறோம். முக்கியமானது நமது முட்டாள்தனமான நடக்கையிலிருந்து நாம் எவ்வாறு கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியம். திருத்தம் செய்யவில்லை என்றால், நமது மோசமான தேர்வுகள் பழக்கமாக மாறக்கூடும், அது நம் தன்மையை எதிர்மறையாக வடிவமைக்கும். நாம் “முட்டாள்கள்” ஆகிவிடுவோம். . . மதிகெட்டவனாக” (பிரசங்கி 10: 3). 

சில நேரங்களில் நம் முட்டாள்தனத்தை ஒப்புக்கொள்வது கடினம், ஏனெனில் அதற்கு கூடுதலான செயல்பாடு தேவைப்படுகிறது. ஒருவேளை ஒரு குறிப்பிட்ட குறைபாட்டை நாம் பிரதிபலிக்க வேண்டும், அது வேதனையானது. அல்லது ஒரு முடிவு அவசரமாக எடுக்கப்பட்டது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும், அடுத்த முறை நாம் அதிக அக்கறை எடுக்க வேண்டும். காரணம் எதுவாக இருந்தாலும், நம்முடைய முட்டாள்தனமான வழிகளைப் புறக்கணிக்க அது ஒருபோதும் உதவாது.

அதிர்ஷ்டவசமாக, தேவன் நம்முடைய முட்டாள்தனத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் நம்மை வடிவமைப்பதற்கும் பயன்படுத்தலாம். எந்தச் சிட்சையும் “தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல்” துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்”(எபிரெயர் 12:11). நம்முடைய முட்டாள்தனமான நடக்கைக்காக நம்முடைய பிதாவின் சிட்சையை ஏற்றுக்கொள்வோம், அவர் விரும்பும் மகன்கள் மற்றும் மகள்களைப் போல நம்மை மேலும் மாற்றும்படி அவரிடம் வேண்டிக்கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்பான தலைமைத்துவம்

ஒரு தாய் கரடி தன்னுடைய நான்கு குட்டிகளையும் தூக்கிக்கொண்டு மனிதர்கள் நடமாடும் வீதியில் வலம்வந்த காணொலியை பார்த்தது என் முகத்தில் புன்னகையை வருவித்தது. அது தன் ஒவ்வொரு குட்டிகளையும் சாலையின் மறுபுறம் கொண்டு செல்வதும், அவைகள் மீண்டும் திரும்பி வருவதையும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. அந்த தாய் கரடி, ஒரு கட்டத்தில் தன் நான்கு குட்டிகளையும் ஒருசேர தூக்கிக்கொண்டு ஒரேயடியாய் சாலையை பாதுகாப்புடன் கடந்தது.  
ஒரு தாயின் சலிப்படையாத இந்த செய்கையை காண்பிக்கும் இந்த காணொலியானது, தெசலோனிக்கேய திருச்சபை விசுவாசிகள் மீது பவுல் வைத்திருக்கும் அன்பை விவரிக்க பவுல் பயன்படுத்திய உருவகத்தோடு ஒத்துப்போகிறது. அவருடைய அதிகாரத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, தன்னுடைய வேலையை தன்னுடைய இளம் குழந்தைகளை பராமரித்துக்கொள்ளும் பெற்றோருக்கு ஒப்பிடுகிறார் (1 தெசலோனிக்கேயர் 2:7,11). தெசலோனிக்கேய மக்கள் மீதான இந்த ஆழமான அன்பே (வச. 8), பவுல் அப்போஸ்தலரை உற்சாகப்படுத்தி, தேற்றி, தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழச் செய்தது (வச. 12). தெய்வீக வாழ்க்கைக்கான இந்த உணர்ச்சிபூர்வமான அழைப்பு, அவர்கள் தங்கள் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் தேவனை கனப்படுத்துவதை பார்க்கவேண்டும் என்ற அவரது அன்பான விருப்பத்தின் விளைவாகும்.  
நமது தலைமைத்துவ வாய்ப்புகள் அனைத்திலும், அதிலும் குறிப்பாக பொறுப்புகள் நம்மை சோர்வடையச் செய்யும் போது பவுலின் இந்த உதாரணம் நமக்கு வழிகாட்டியாக அமையும். கர்த்தருடைய ஆவியானவராலே நடத்தப்பட்டு, நம்முடைய தலைமைத்துவத்தின் கீழ் இருப்பவர்களை மென்மையாகவும் உறுதியாகவும் நேசித்து வழிநடத்துவோம்.

அன்பினிமித்தம்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது என்பது உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலப்படுத்துகிறது. ஆனால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு வீராங்கனைக்கு ஓட்டப்பந்தயம் என்றால் தள்ளிக்கொண்டுபோவது என்று விளங்கியிருக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின்போதும், பதினான்கு வயது நிரம்பிய சூசன் பெர்க்மான் தன்னுடைய மூத்த சகோதரன் ஜெஃப்ரியை  அவனுடைய சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே ஓடுவாள். ஜெஃப்ரி பிறந்து இருபத்தி இரண்டு மாதத்தில் அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதின் விளைவாய் கடுமையான மூளை பாதிப்பு மற்றும் பெருமூளை வாதம் ஏற்பட்டது. இன்று சூசன் தன்னுடைய சகோதரனுக்காக அவளுடைய தனிப்பட்ட ஓட்டப்பந்தய இலக்குகளை தியாகம் செய்துவிட்டாள். ஆகையினால் ஜெஃப்ரியும் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளமுடிகிறது. இந்த தியாகமான அன்பு ஆச்சரியப்படவைக்கிறது.  
பவுல் அப்போஸ்தலர் “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” என்று எழுதும்போது இந்த அன்பையும் தியாகத்தையும் சிந்தையில் வைத்தே எழுதியிருக்கிறார் (ரோமர் 12:10). ரோமத் திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் பொறாமை, கோபம் மற்றும் ஆழமான கருத்து வேறுபாடுகளுடன் போராடுகிறார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார் (வச. 18). எனவே, தெய்வீக அன்பு அவர்களின் இதயங்களை ஆள அனுமதிக்கும்படி அவர் அவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றிய இந்த வகையான அன்பு, மற்றவர்களுக்கு மேன்மையான நன்மையை கொடுக்க பிரயாசப்படும். அது நேர்மையானதாகவும், தயாள குணம் படைத்ததாகவும் வெளிப்படும் (வச. 13). இந்த வழியில் அன்பு செலுத்துகிறவர்கள் தங்களைக் காட்டிலும் மற்றவர்களை கனம் பெற்றவர்களாய் கருதுவார்கள் (வச. 16).  
கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களுக்கு துணைபுரிந்து ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடச்செய்து இலக்கை அடையச்செய்யும் அன்பின் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். அது கடினமானதாய் தெரிந்தாலும் அது இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது. அன்பினிமித்தம் நாம் அவரை சார்ந்துகொண்டு, மற்றவர்களை நேசிக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் பிரயாசப்படுவோம்.  

எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?

“ஐயோ!” எனக்கு முன்பாக போய்க்கொண்டிருந்த பழுதுபார்க்கும் லாரி திடீரென்று திரும்பியதால் நான் அலறினேன்.  
அந்த வாகனத்தில் பின்புறம் “எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?” என்று கேட்டு அதற்கு கீழ் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டேன். நான் ஏன் அழைக்கிறேன் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். நான் என் விரக்தியை கோபமாய் வெளிப்படுத்தினேன். டிரக்கின் நம்பரை குறித்துக்கொண்டாள். பின்னர் அவள், “எப்போதும் நன்றாக வாகனம் ஓட்டும் ஒருவரைக் குறித்து சொல்லுவதற்கும் நீங்கள் எங்களை அழைக்கலாம்” என்று சோர்வுடன் சொன்னாள். 
அவளுடைய அந்த சோகமான வார்த்தைகள் என்னை தடுமாறச் செய்தது. என் தவறை நான் உணர்ந்தேன். எனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக, நான் பேசிய கோபமான வார்த்;தைகள் அந்த கடினமான வேலை செய்யும் பெண்ணை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கவேண்டும் என்று யோசித்தேன். என்னுடைய விசுவாசத்திற்கும் கனிகொடுக்கும் ஜீவியத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு அற்றுபோனதாக அவ்வேளையில் நான் உணர்ந்தேன்.  
நம்முடைய செய்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைத் தான் யாக்கோபு நிருபம் வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1:19-20இல் “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” என்று வாசிக்கிறோம். மேலும் அவர், “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்றும் ஆலோசனை கூறுகிறார்.  
நாம் யாரும் நேர்த்தியானவர்கள் இல்லை. சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை என்னும் வாகனத்தை ஓட்டும்போது, நம்முடைய கடினமான வாழ்க்கைப் பாதையில் அவர் நம்முடைய கடினமான சுபாவங்களை மாற்றுவார் என்று நம்பி அவரை சார்ந்துகொள்ள முற்படுவோம்.